பரபரப்புக்குள்ளான பத்மாவத் திரைப்படம், 13ம் நூற்றாண்டை சேர்ந்த அலாவுதீன் கில்ஜியையும், ராஜஸ்தானில் உள்ள சித்தோட் என்ற ராஜ்ஜியத்தையும் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
அவதி ராஜ்ஜியத்தைச் சேர்ந்த சூஃபி கவிஞரான மாலிக் முகமது ஜயஸி 1540ம் ஆண்டு எழுதிய ‘பத்மாவத்’ என்ற காப்பியத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகவும் திரைப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13ஆம் நூற்றாண்டில் சிங்களத்திற்கு செல்லும் அரசன் ரத்தன் சிங், அந்நாட்டு இளவரசியான பத்மாவதியைக் காதலித்து, திருமணம் செய்து கொண்டு மெவாடின் நாட்டுக்கு திரும்புகிறான்.
அதேவேளையில், அதே நேரம், டில்லியில் சுல்தான் வம்சத்தை ஏற்படுத்திய, ஜலாலுதீன் கில்ஜியை கொன்றுவிட்டு, அலாவுதீன் கில்ஜி தானே சுல்தானா மூடிசூட்டிக் கொள்கிறான்.
இதற்கிடையில், அரசன் ரத்தன் சிங்கால் நாடு கடத்தப்பட்ட ராஜகுரு, அலாவுதீன் கில்ஜியை சந்தித்து ரத்தன் சிங்கை பழிவாங்க துடிக்கிறான். இதன் காரணமாக அரசி பத்மாவதியின் அழகு குறித்து கில்ஜியிடம் எடுத்துரைத்து, அவரை கவர்ந்துவர அறிவுறுத்துகிறான்.
இதையடுத்து கில்ஜி மேவாட் மீது படையெடுத்து ரத்தன் சிங்கை சிறைபிடித்து செல்கிறான். ஆனால் பத்மாவதி தப்பித்து விடுகிறாள். பின்னர் டில்லி சென்று, கில்ஜியிடம் சூழ்ச்சி செய்து அரசை மீட்டு வருகிறார் அரசி பத்மாவதி.
இதற்கிடையில் அரசி பத்மாவதியின் அழகின் மீது பலர் மோகம் கொள்கின்றனர். ரத்தன் சிங் இல்லாத நேரத்தில் கும்பனேரின் அரசனான தேவ்பால் பத்மாவதியை மணக்க விரும்புகிறான்.
இதுகுறித்து அறிந்த ரத்தன்சிங், தேவ்பாலுடன் போருக்கு செல்கிறான். இதில் இருவருமே மாண்டு போகின்றனர். அதையடுத்து ரத்தன் சிங்கின் சிதையில் விழுந்து தனது உயிரை மாய்த்துக்கொள்கிறார் அரசி பத்மாவதி.
இதுகுறித்து அறியாத அலாவுதீன் கில்ஜி, பத்மாவதியை கவர எண்ணி, மேவாடின் மீது படையெடுத்து வருகிறான்.
கில்ஜி படையுடன் ராஜபுத்திர படையினர் போரிட்டு வரும் வேளையிலே, ராஜபுத்திர வம்ச பெண்கள் கில்ஜியின் கையில் மாட்டக்கூடாது என்ற எண்ணத்தில், கூட்டம் கூட்டமாக சதியில் இறங்கி மடிகிறார்கள்.
இந்நிலையில் போரில் வெற்றி பெற்ற கில்ஜி, தான் நினைத்தது நடை பெறாமல் ஏமாற்றம் அடைகிறான்.
இதுதான் பத்மாவத் படத்தின் கதை.
ஆனால், படத்தில், ரத்தன் சிங், கும்பனேரின் அரசனுடன் சண்டையிட்டு மடிவதற்குப் பதிலாக அலாவுதீன் கில்ஜியுடன் சண்டையிட்டு மடிவதாகவும் அலாவுதீன் கில்ஜியின் கையில் கிடைக்காமல் போவதற்காக பெண்கள் அனைவரும் தீயில் விழுந்து உயிரிழப்பதாகவும் படத்தை முடித்திருக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி.
இந்த படத்தை சஞ்சய் லீலா பன்சாலி மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார். அந்த காலத்து அரசர்களின் கோட்டைகள், அரண்மனைகள் போன்றவை நம்மை 13ம் நூற்றாண்டு காலத்திற்கே அழைத்து செல்லும் வகையில், கிராம்பிக்ஸ் தொழில் நுட்பம் மூலம் ரசிகர்களை படத்தோடு ஒன்றிணைய வைத்திருகிகாறர்.
துல்லியமான ஒளி, ஒளிப்பதிவு, இசை போன்றவற்றுடன் தனது படங்களுக்கே உரிய பிரம்மாண்டத்தை மீண்டும் நிரூபித்துள்ளார் சஞ்சய் லீலா பன்சாலி.