டில்லி,

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

தமிழகத்தை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் மறைந்த சோ ராமசாமிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது,

மேலும், ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் விளையாட்டு வீராங்கனைளுக்கு குடியாசுத் தலைவர் இன்று பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

இந்த ஆண்டு 7 பேருக்கு பத்ம விபூஷன், 7 பேருக்கு பத்ம பூஷன், 75 பேருக்கு பத்மஸ்ரீ என மொத்தம் 89 பேருக்கு விருதுகள் விவரம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த விருதுகளை குடியரசுத்தலைவர் பிராணப் முகர்ஜி இன்று வழங்கினார்.   தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார். மறைந்த பத்திரிக்கை யாளர் சோவுக்கு வழங்கப்பட்ட விருதை அவரது மனைவி பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொண்டார்.’

சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு பத்ம விபூஷன் விருதும், பாடகர் யேசுதாசுக்கு பத்ம விபூஷன், ஒலிம்பிக்கில் நான்காம் இடம் பிடித்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் மற்றும் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற வீராங்கனை சாக்ஷி மாலிக், பாடகர் கைலாஷ் கேருர் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.