
வாசவி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வி.கே.மாதவன் தயாரிக்கும் படம் “ பார்க்க தோணுதே“. இந்த படத்தில் அர்ஷா நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சாரா அறிமுகமாகிறார். மற்றும் அமர், பாண்டு, உசிலம்பட்டி கார்த்தி, வெளுத்துக்கட்டு அப்பு, பாத்திமா ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தை பற்றி இயக்குனர் ஜெய் செந்தில்குமார் கூறும்போது, கிராமத்து பின்னணியில் நடக்கும் திரில்லர் கதை, அதை காமெடி கலந்து உருவாக்கி இருக்கிறோம். நாயகனுக்கு எதிர்பாராத விதாமாக கீழே ஒரு செல்போன் கிடைக்கிறது. அந்த செல்போனை வீட்டிற்கு எடுத்து வருகிறான். அந்த செல்போனால் நாயகனுக்கு பெரிய பிரச்சனையுடன், அதிர்ச்சியான சம்பவங்களும் நடக்கிறது. அது என்ன அதிலிருந்து எப்படி தன்னை காப்பாற்றிக் கொண்டான் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், ஏற்காடு போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.
Patrikai.com official YouTube Channel