வேலூர்:
ந்திர அரசு பாலாற்றில் தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்து திமுக சார்பில் வேலூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக போராட்டம்   பாலாறு தடுப்பணை
வேலூர்  திமுக போராட்டம்                                      பாலாறு தடுப்பணை உயர்த்தி கட்டப்படுகிறது

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டுவதை கண்டித்து தி.மு.க. சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்  என  ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்டிபடி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக பொருளாளர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
பாலாற்றில் தடுப்பணைகள் கட்டும் ஆந்திர அரசையும், அதை கண்டு கொள்ளாத தமிழக அரசையும்  கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
பாலாறு கர்நாடகாவில் உற்பத்தியாகி ஆந்திரா வழியாக தமிழகம் வந்து இறுதியில் கடலை அடைகிறது. பாலாறு வரும் வழியில் ஆந்திராவில் ஏற்கனவே 22 தடுப்பணைகள் உள்ளன. வேலூர் மாவட்டம் பெரும்பள்ளம் கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையின் உயரத்தை 5 அடியில் இருந்து 12 அடியாக ஆந்திர அரசு  உயர்த்தி வருகிறது.  மேலும் பாலாற்றின் துணை நதிகளிலும் தடுப்பணை கட்ட முயற்சி செய்து வருகிறது.
தடுப்பணைகள் உயர்த்தப்படுவதால் தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துவிடும். மேலும் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டத் தில் 4 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாலாற்றை நம்பியே உள்ளது.  பாலாற்றில் தண்ணீர் வரவில்லை என்றால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். குடிநீர் பிரச்சினைகளும் உருவாகும். எனவே  ஆந்திர அரசின் இந்த முடிவை எதிர்த்து தமிழக அனைத்து அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது சம்பந்தமாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.