சென்னை:
அதிமுகவின் இலக்கிய அணி செயலாளரான வைகைச் செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுகவின் மகளிர் அணி செயலாளராக பா.வளர்மதி, இலக்கிய அணி செயலாளரான வைகைச் செல்வன் மற்றும் வர்த்தக அணிச் செயலாளராக வெங்கட்ராமன் ஆகியோர் நியமிக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
அதிமுகவில் பல்வேறு நிர்வாகிகள் புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அதிமுகவில் அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்கள் இனி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது :
கழக இலக்கிய அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திருமதி பா. வளர்மதி அவர்களும், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் முனைவர் வைகைச்செல்வன் அவர்களும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகளாகவும்; சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாகவும் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
கழக மகளிர் அணி நிர்வாகிகள்: செயலாளர்- திருமதி பா. வளர்மதி, (B.A.) அவர்கள் (கழக செய்தித் தொடர்பாளர், முன்னாள் அமைச்சர்) இணைச்செயலாளர்- திருமதி மரகதம் குமாரவேல், B.A., M.L.A., அவர்கள் (செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
கழக இலக்கிய அணி: செயலாளர்- முனைவர் வைகைச்செல்வன் , M.A., B.L, D.Ed., D.Lit., Ph.D.. அவர்கள் (கழக செய்தித்தொடர்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்) கழக வர்த்தக அணி நிர்வாகிகள்: செயலாளர்- திரு. V.N.P.வெங்கட்ராமன், B.E., Ex. M.L.A., அவர்கள் (ஆலத்தூர் கிழக்கு பகுதிக் கழகச் செயலாளர் சென்னை புறநகர் மாவட்டம் )
திரு. A.M.ஆனந்தராஜா அவர்கள் (சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர், தூத்துக்குடி தெற்கு மாவட்டம்) கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் முன்னாள் அமைச்சர்களாக இருந்த பா வளர்மதி, வைகை செல்வன் ஆகிய இருவருக்கே புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் ஈரோடு மாவட்டத்தை கட்சியின் அமைப்பு ரீதியாக பிரித்து பொறுப்பு வழங்கப்பட்டது .