சென்னை
தமிழகத்தில் நடைபெறும் திமுக அரசின் செயல்பாடுகளை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் புகழ்ந்துள்ளார்.

திமுக ஆட்சியைப் பிடித்து ஒரு வருடத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. வரும், 19 ஆம் தேதி நடைபெற உள்ள இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இதில் எதிர்க்கட்சிகள் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை என்பதாகும்.. திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றி விட்டது எனப் பதில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப சிதம்பரம் டிவிட்டரில் ஒரு பதிவை பதிந்துள்ளார்.
அவர்,
”திமுக அரசு ஒரு தப்பான அடிகூட வைக்காமல் தடம் புரளாமல் செயல்படுகிறது..
ஒரே நாளில் எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியாது:”
எனப் பதிந்துள்ளார்.
[youtube-feed feed=1]✳️ திமுக அரசு ஒரு தப்பான அடிகூட வைக்காமல் தடம் புரளாமல் செயல்படுகிறது.
✳️ ஒரே நாளில் எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியாது:
திரு ப.சிதம்பரம் @PChidambaram_IN pic.twitter.com/nFHmc4I9sC— With P.Chidambaram – Fan of P.Chidambaram (@wthPChidambaram) February 15, 2022