சென்னை:

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட 5 மக்கள் நல அறிவிப்புகளை அரசு உத்தரவாக்கி வெளியிட்டமைக்கு  காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், இன்று பதவியேற்றுக்கொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் என்னுடைய வாழ்த்தையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த ஐந்து மக்கள் நல அறிவிப்புகளை அரசு உத்தரவாக்கி இன்று வெளியிட்டமைக்கு என்னுடைய மகிழ்ச்சி நிறைந்த மனமார்ந்த பாராட்டுக்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவைத் தேர்தலின் போது தான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 5 வாக்குறுதிகளை முதல் கையெழுத்திலேயே நிறைவேற்றினார்.