டெல்லி
பிரதமர் மோடி அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற டிரம்புக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துளார்.

டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபராக இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற அவருக்கு அமெரிக்க உச்சநீதிமன்ற, தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் ஜுனியர், பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுக்கொண்டுள்ள டிரம்பிற்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்’
”அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றுள்ள எனது அன்பு நண்பர் அதிபர் டொனால்டு டிரம்பிற்கு வாழ்த்துகள்.
இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையிலும், உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையிலும் மீண்டும் ஒருமுறை நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்.
உங்கள் எதிர்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்”0″
என்று பதிவிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]