டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வந்த சமயத்தில் ஆக்சிஜன் தேவைக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால், ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஜூலை மாதம் இறுதி வரை ஆக்ஜிஜன் தயாரிக்க உச்ச நீதிமன்ற அனுமதியுடன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இயங்க வருகிறது. அதன்படி, கடந்த மே மாதம் 12ந்தேதி முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆக்சிஜன் தயாரிக்கும் காலக்கெடு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் 6 மாதம் அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
இதற்கு, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் திமுக கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்டு கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், கொரோனா 3வது அலையை சமாளிக்கும் அளவுக்கு ஆக்சிஜன் ஸ்டாக் இருக்கு, ,இருந்தாலும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படாது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக கருத்துதெரிவித்தார். இது தூத்துக்குடி மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விமர்சனங்களும் எழுந்தன.
வேதாந்த நிறுவனம் மேலும் 6 மாத கால அவகாசம் கேட்டு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் அடுத்த வெள்ளிக்கிழமைக்கு விசாரணைக்கு வருகிறது. இதையெதட்டி, தமிழக அரசு சார்பில், வேதாந்த நிறுவனத்தின் இடைக்கால மனுவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை தாக்கல் செய்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல்,. தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க வேண்டியதில்லை என்று உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த வாரம் மனு விசாரணைக்கு வரும் வரை தற்போதைய நிலைப்படி ஆக்சிஜன் உற்பத்தி தொடரும் என்று நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்படாது; 3வது அலையை எதிர்கொள்ள ஆக்சிஜன் ஸ்டாக் இருக்கு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்