இந்தி சினிமாவில் கொடி கட்டிப்பறந்த ராஜ்கபூர், பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் பிறந்தவர்.
இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு ராஜ்கபூர் குடும்பம் மும்பையில் குடியேறி விட்டது.
பெஷாவரில் ராஜ்கபூர் குடும்பத்துக்கு சொந்தமாக ஒரு வீடு இருந்தது, இந்த வீட்டில் தான் ராஜ்கபூர் பிறந்தார்.
இந்தியாவில் ராஜ்கபூர் குடும்பத்தினர் குடியேறியதால் பெஷாவர் வீட்டை விற்று விட்டனர்.
அதனை நினைவு இல்லமாக்க, அவரது வீடு உள்ள ஹைபர் பக்துங்கா மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
அந்த வீட்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் விலை நிர்ணயித்து, அந்த தொகையை ஒதுக்கீடும் செய்து விட்டது.
ஆனால் அந்த வீட்டை விலைக்கு வாங்கி உள்ள ஹாஜி அலி சபீர் என்பவர் 1.5 கோடி ரூபாய்க்கு வீட்டை கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டார்.
“ராஜ்கபூர் வீட்டின் இன்றைய மார்க்கெட்விலை 200 கோடி ரூபாய். ஆனால் அந்த வீட்டில் விலை ஒன்றரை கோடி ரூபாய் என தவறாக மதிப்பிட்டுள்ளனர்” என்றும் ஹாஜி அலி சபீர் கூறியுள்ளார்.
“வீட்டுக்கு கிராக்கி உள்ளதால், சபீர் அதிக விலை கேட்கிறார்” என அரசு தரப்பில் குற்றம் சாட்டுகிறார்கள்.
– பா. பாரதி