ஐதராபாத்
ஏ ஐ எம் ஐ எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி மனைவியை அடிக்க வேண்டாம் என இஸ்லாமியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

இஸ்லாமியர்கள் பெண்களை மதிப்பது இல்லை எனவும் அவர்களை மிகவும் கொடுமை செய்வதாகவும் பலரும் பேசி வருகின்றனர். இஸ்லாமியர்கள் அமைப்பான எ ஐ எம் ஐ எம் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெலுங்கானாவில் ஐதராபாத் தொகுதியின் எம் பி ஆவார்.. இவர் தனது கட்சிக் குட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார்
அவர் தனது உரையில்,
”அனைத்து ஆண்களும் அவர்களுடைய மனைவிகளிடம் அன்போடு நடந்து கொள்ள வேண்டும். நான் பல முறை இதுபற்றி கூறியிருப்பது பலரையும் கவலைக்குள்ளாகி இருக்கிறது. உங்களுக்கு உங்கள் மனைவி துணி துவைத்துப் போட வேண்டும் என்றோ அல்லது உங்களுக்காக சமைத்துப் போடவோ, தலையை பிடித்து விடவோ குரான் கூறவில்லை.
மனைவியின் ஊதியத்தில் கணவருக்கு எந்தவித உரிமையும் இல்லை அதே வேளையில், கணவரின் வருவாயில் மனைவிக்கு உரிமை உள்ளது. ஏனெனில், இல்லத்தரசியானவள் வீட்டை நடத்த வேண்டும்.
மனைவி உணவு சமைக்கவில்லை என்றோ, உணவில் உப்பு இல்லை என்றோ கூறும் சகோதரர்களே, அது பற்றி இஸ்லாமில் எங்கேயும் கூறப்படவில்லை இதனால். மனைவிகளிடம் கொடூரத்துடன் நடந்து கொள்பவர்கள் மற்றும் அவர்களை அடிப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர்.
நபிகள் எந்த இடத்திலும் ஒரு பெண்ணை அடித்ததில்லை. அவர் அடித்திருக்கிறார் என்றால், அது எந்த இடத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று நீங்கள் என்னிடம் கூறுங்கள்.உங்கள் கோபங்களை உங்களுடைய மனைவி மீது கொட்டுவது அல்லது அவரை அடிப்பது ஆண்மை இல்லை. மாறாக மனைவியின் கோபங்களைச் சகித்து கொள்வதே ஆண்மை “
என்று கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]