
டெல்லியின் பல பகுதிகளில், “மோடி ஜி ஹமாரே பச்சோன் கி வாக்சின் விதேஷ் க்யோன் பேஜ் தியா? (மோடி ஜி, எங்கள் குழந்தைகளின் தடுப்பு மருந்துகளை ஏன் வெளிநாடுகளுக்கு அனுப்பினீர்கள்?)” என்று எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
அத்தகைய சுவரோட்டிகள் ஒட்டிய ஒன்பது பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
இதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போன்றோர் , இக்கைதை கண்டித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த கைதை குறித்து, இன்று (மே 17) தனது டிவிட்டர் பக்கத்தில் ஓவியா, “இதுதான் ஜனநாயகமா இல்லை ? என்னையும் கைது செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Is this democracy or democrazy ???#ArrestMeToo
— Oviyaa (@OviyaaSweetz) May 16, 2021
Patrikai.com official YouTube Channel