சென்னை

வியா நடித்துள்ள 90 எம் எல் தமிழ் திரைப்பட டிரையிலரால் ஓவியா ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

நடிகை ஓவியா களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர். முதல் படம் ஹிட் ஆனதில் இருந்தே அவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது. பிக்பாஸ் நிகழ்வில் அவர் கலந்துக் கொண்டதும் அவருக்கு இன்னும் ஏராளமான ரசிகர்கள் சேர்ந்தனர். அவரது ரசிகர்கள் தங்களை ஓவியா ஆர்மி என அழைத்துக் கொண்டனர்.

பிக்பாஸ் நிகழ்வுக்கு பிறகு தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அதில் 90 எம் எல் என்னும் தமிழ்ப்படமும் ஒன்றாகும். இந்த திரைப்படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை குளிர் 100 டிகிரி படத்தை இயக்கிய அனிதா உதிப் இயக்கி உள்ளார்.

கதாநாயகியை மையமாகக் கொண்ட கதை எனக் கூறப்படும் இந்த படத்தின் டிரெயிலர் நேற்று முன் தினம் வெளியாகியது. இந்த டிரைலரின் பல வசனங்களும் காட்சிகளும் ஓவியா ரசிகர்கள் குறிப்பாக பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. இப்படத்தை தடை செய்ய வேண்டும் என பெண்ணிய ஆர்வலர்கள் குரல் எழுப்புகின்றனர்.

நடிகை ஓவியா இந்த சர்ச்சை குறித்து தனது டிவிட்டரில், “பழத்தை சுவைப்பதற்கு முன்பே விதை என்ன என தீர்மானிக்காதீர்கள். காத்திருந்து முழுப்படத்தையும் பாருங்கள். வெறும் டிரைலரை மட்டும் பார்த்து படத்தை பற்றி தீர்மானம் செய்யாதீர்கள்” என அலட்டிக் கொள்ளாமல் பதிந்துள்ளார்.

 

[youtube https://www.youtube.com/watch?v=Jl14barRz84]