டெல்லி: கொரோனா பாதிப்பால் சிறையில் உள்ள கைதிகளை விடுவிப்பது தொடர்பாக உயர்மட்ட குழுவை அமைக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் அனைவரும் வீடுகளில் தங்கி இருக்க வேண்டுகோள் விடுத்து வருகிறது.
இந் நிலையில், சிறையில் உள்ள கைதிகளை விடுவிப்பது தொடர்பாக உயர்மட்டக் குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அனைத்து மாநிலங்களையும் கேட்டு கொண்டுள்ளது.
அதாவது, எந்த கைதிகளை பரோலில் அல்லது இடைக்கால ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று இக்குழு முடிவு செய்யும். இந்த குழுவில் இயக்குநர், அந்தந்த மாநில செயலாளர்கள், சிறைத்துறை டிஜிக்கள் ஆகியோர் இடம்பெற்று இருப்பர்.
மேலும், தேவையற்ற கைதுகளை தவிர்க்க பீகார் மாநிலத்தில் அர்னேஷ் குமார் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை அமலாக்கத்துறை பின்பற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.