சென்னை:

சென்னையில் கொரோனா நோய் பரவல் இன்றைய நிலவரம் (28/04/2020)  குறித்து சென்னை மாநகராட்சி  மண்டலவாரியாக நிலைப் பட்டியல் வெளியிட்டு உள்ளது.

சென்னையில் மட்டும் 570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் இதுவரை 173 பேர் குணமடைந்து உள்ளனர். இன்றைய நிலவரப்படி பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 384.  பலியானோர் 12.

நேற்று மட்டும் 52 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில், சென்னையில் மட்டும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை மண்டல வாரியாக மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

திருவொற்றியூர் 15, மணலி 01, மாதவரம் 03, தண்டையார்பேட்டை 66, ராயபுரம் 158, திருவிக நகர் 94, அம்பத்தூர் 15, அண்ணாநகர் 53, தேனாம்பேட்டை 56, கோடம்பாக்கம் 54, 17, ஆலந்தூர் 09, அடையாறு 17, பெருங்குடி 09, சோழிங்கநல்லூர் 02 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

[youtube-feed feed=1]