சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 906-ஆக உயா்ந்துள்ளது. இவர்களில் 216 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15 பேர் மரணம் அடைந்துள்ளனர். 673 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னை மண்டலத்தில் அதிகபட்ச கொரோனா நோயாளிகள் உள்ள பகுதியாக திருவிக நகர் மாறி உள்ளது. ராயபுரம் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் திருவிக நகரில் புதிதாக 41 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து திருவிக நகரில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 210 ஆக உயர்ந்துள்ளது.
ராயபுரத்தில் நேற்று புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 199 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் கரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலமாக திருவிக நகர் மாறியுள்ளது.
மேலும் கோடம்பாக்கத்தில் 34 பேருக்கும் தேனாம்பேட்டையில் 20 பேருக்கும் அண்ணாநகரில் 13 பேருக்கும், வளசரவாக்கத்தில் 10 பேருக்கும் நேற்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: