சென்னை:
மிழகத்தில் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக சென்னை திகழ்ந்து வருகிறது. இங்குள்ள 16 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சி  தகவல் வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3000 ஐ எட்டியுள்ளது. அதிக அளவில் பாதிக்கப்பட்டு வரும் பகுதியாக மாநில தலைநகர் கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 203 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். இந்தநிலையில், கொரோனா பாதிப்பு குறித்த விவரம் மண்டலம் வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது.

அதில், ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம்,அடையாறு, வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக திரு.வி.க நகர் மற்றும் ராயபுரத்தில் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் மொத்தமாக 1458 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று மட்டும் 203 பேர் உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், இவர்களில் 1210 பேர் தற்போதும் நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 17 பேர் பலியான நிலையில், 226 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.