சென்னையில் அதிகப்பட்சமாக ஷாகின் பாத் போராட்டம் நடத்திய பகுதியாய ராயபுரம் பகுதியில் இதுவரை 189 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதைத்தொடர்ந்து 2வது இடத்தல் திருவிக நகர் உள்ளது. இங்கு 169 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 63 பேருக்கும், அண்ணாநகரில் 73 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 77 பேரும், தேனாம்பேட்டையில் 85 பேரும், திருவொற்றியூரில் 16 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வளசரவாக்கத்தில் 30 பேருக்கும், பெருங்குடியில் 9 பேருக்கும், அடையாறில் 19 பேருக்கும், அம்பத்தூரில் 20 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 9 பேருக்கும், மாதவரத்தில் 4 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 2 பேருக்கும், மணலியில் 1 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.