சென்னையில் கொரோனா: 29/04/2020 – மண்டலம் வாரியாக நிலைப் பட்டியல்

Must read

சென்னை:

சென்னையில் கொரோனா நோய் பரவல் இன்றைய நிலவரம் (29/04/2020)  குறித்து சென்னை மாநகராட்சி  மண்டலம் வாரியாக நிலைப் பட்டியல் வெளியிட்டு உள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்  திரு.வி.க. நகரில் மட்டும்  35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில்  நேற்று ஒரேநாளில் மட்டும் 121 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் 103 பேர் செனைனையைச் சேர்ந்வர்கள் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சென்னையில், ராயபுரத்தில் 164 பேருக்கும், திருவிக நகரில் 128 பேருக்கும் கொரோனா தொற்று பாதித்துள்ளது.

குறிப்பாக, தலைநகா் சென்னையில் கடந்த இரு வாரங்களில் மட்டும் 500-க்கும் மேற்பட்டோா் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். சென்னை கோயம்பேடு பகுதி உள்பட சில பகுதிகளில் கொத்துக்கொத்தாக கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதால், அது சமூகத் தொற்றாக மாறும் வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து கொரோனாவை க கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு  மேலும் தீவிரம் காட்டி வருகிறது.

சென்னையில் கடந்த 27ந்தேதி அன்று 570ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று காலை 9 மணி நிலவரப்படி 673 ஆக உயர்ந்துள்ளது.

More articles

Latest article