கத்தாரில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி: டெல்லி விமான நிலையத்தில் கைது

Must read

ஸ்ரீநகர்: என்கவுன்ட்டரில் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதியின் கூட்டாளி காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவால் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க வேலைகளில் முனீப் சோபி என்பவர் ஈடுபட்டு வந்துள்ளார். தேடப்படும் தீவிரவாதியாகவும் அவர் அறிவிக்கப்பட்டவர்.

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் கடந்தாண்டு நடந்த என்கவுன்ட்டர் சம்பவத்தில் பாகிஸ்தானிய தீவிரவாதி வாலீத் பாய் சுட்டு கொல்லப்பட்டார்.  அவருக்கு உதவியாக செயல்பட்டு வந்த முனீப் சோபி கத்தார் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவரை குல்காம் போலீசார் கைது செய்தனர். இதனை ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னதாக, அவந்திபோரா பகுதியை சேர்ந்த 2 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.

More articles

Latest article