டெல்லி: எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மாலை 6 மணி வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற தொடர் அமளியால் நேற்று மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, மக்களவை இன்று பிற்பகல் கூடியது.

ஆனால் அவை கூடிய சிறிது நேரத்தில், மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். அவர்களை இருக்கைகளில் அமருமாறு அவைத் தலைவர் ஓம் பிர்லா கூறினார்.

அவையில் அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்கலாம் என்றும் அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்க வேண்டாம் என்றும் கூறி வந்தார். ஆனால் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட, மக்களவையை மாலை 6 மணி வரை ஒத்திவைத்து ஓம் பிர்லா உத்தரவிட்டார்.