டில்லி:

ஹோலி பண்டிகை அன்று போக்குவரத்து வீதிமீறியதாக 9,300 பேர் மீது டில்லியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹோலி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் டில்லியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த வகையில் தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டது.

நேற்று ஒரு நாள் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 9,300 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் 1,918 பேர் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 608 வழக்குகள் தெற்கு டில்லியில் பதிவான வழக்குகளாகும்.

டூவீலரில் ஹெல்மட் அணியாமல் பயணம் செய்த 4,634 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டூவீலரில் 3 பேர் பயணம் செய்தததாக 1,164 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதர போக்குவரத்து விதிமீறலில் 1,589 பேர் சிக்கினர்.