ஜெனீவா:
உலகளவில் 90,000-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செவிலியர்கள் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஜெனீவாவை தளமாகக் கொண்ட சங்கம் ஒரு மாதத்திற்கு முன்பு மத்திய சீன நகரமான வுஹானில் வெளிவந்த கொரோனா வைரஸால் தூண்டப்பட்ட தொற்றுநோயால் 100 செவிலியர்கள் இறந்துவிட்டதாகக் தெரிய வந்துள்ளது
இதுகுறித்து வெளியான செய்தியில், சுகாதாரப் பணியாளர்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 23,000 இலிருந்து அதிகரித்து, 90,000-மாக உயர்ந்துள்ளது. ஆனால் இது இன்னும் ஒரு மதிப்பீட்டிலேயே உள்ளது என்றும், ஐசிஎன் தலைமை நிர்வாக அதிகாரி ஹோவர்ட் காட்டன் கூறினார்.
90,000 மதிப்பீடு தேசிய நர்சிங் சங்கங்கள், அரசாங்க புள்ளிவிவரங்கள் மற்றும் ஊடக அறிக்கைகள் ஆகியவற்றிலிருந்து 30 நாடுகளில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.என் 130 தேசிய சங்கங்களையும் 20 மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட செவிலியர்களையும்பிரதிநிதித்துவப் படுத்துகிறது.
” உண்மை என்னவென்றால், அரசாங்கங்கள் இந்த தகவல்களை முறையாக சேகரித்து அறிக்கை அளிக்கவில்லை. அவர்கள் முற்றிலும் கண்மூடித்தனமாகத் அறிக்கை வெளியிட்டுள்ளது போன்றே எங்களுக்குத் தோன்றுகிறது, இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் பிரிட்டனின் கேடன் மேலும் கூறினார்.
ஏப்ரல் 11-ஆம் தேதி அன்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 22,000 சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த அறிக்கையில், சுகாதார ஊழியர்களிடையே தொற்று வீதங்கள் மற்றும் இறப்புகள் இரண்டையும் பதிவு செய்யத் தவறியது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.