சென்னை; அடுத்த 5ஆண்டுகளில் 8லட்சம் குடும்பத்தினருக்கு வீடு கட்டப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக சட்டசபையில் முதன் முறையாக காகிதமில்லா இ – பட்ஜெட்ஜை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும்.

தமிழக பட்ஜெட்டில் குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அரசு உறுதியேற்றுள்ளது.

2021-22 ஆம் ஆண்டில் ரூ.8,017.41 கோடி செலவில் 2,89,877 வீடுகள் கட்டப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடு வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் பிடிஆர் தனது வரவு செலவுத் திட்டத்தில் தெரிவித்துள்ளார்.