பிரயாக்ராஜ்: 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில், கூட்டத்தின்போது, தங்களது சொந்தங்களை பிரிந்து சென்ற மற்றும் காணாமல் போன 54,357 கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் சொந்தங்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்க்கப்பட்டு இருப்பதாக உ.பி. மாநில அரசு அறிவித்து உள்ளது.

45 நாட்கள் பிரமாண்டமாக நடைபெற்ற மகா கும்பமேளாவின்போது, திரிவேணி சங்கமத்தில், சுமார் 66 கோடி பேர் நீராடி சென்றுள்ளனர். இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவிகிதம் என கூறப்படுகிறது. இந்த கும்பமேளா கடந்த பிப்ரவரி மாதம் 26ந்தேதியுடம் நிறைவடைற்த நிலையில், மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு வந்திருந்த பக்தர்களில், கூட்ட நெரிசல் காரணமாக தங்களது சொந்த பந்தங்களை விட்டு விலகி காணாமல் போனவர்களை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மீட்டு, பாதுகாப்பாவை வைத்திருந்து, அவர்களின் உறவினர்கள், சொந்தங்களிடம் பத்திரமாக சேர்த்து வந்தனர்.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உத்தரபிரதேச அரசால் நிறுவப்பட்ட டிஜிட்டல் கோயா பாயா கேந்திரா, காணாமல் போன 35,000க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களை அவர்களது குடும்பங்களுடன் காப்பாற்ற உதவியது. குடும்பங்கள் மற்றும் குழுக்களிடமிருந்து பிரிந்த பக்தர்களைக் கண்காணித்து மீண்டும் ஒன்று சேர்ப்பதற்கு மாநில காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, மகர சங்கராந்தி (ஜனவரி 13-15) அன்று அமிர்த ஸ்னன் பர்வ் போது பிரிந்த 598 நபர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் மீண்டும் இணைந்தனர், மௌனி அமாவாசை (ஜனவரி 28-30) அன்று கிட்டத்தட்ட 8,725 பக்தர்கள் மீண்டும் இணைந்தனர், மேலும் வசந்த பஞ்சமி (பிப்ரவரி 2-4) அன்று 864 பக்தர்கள் மீண்டும் இணைந்தனர், மேலும் பிற நீராடும் விழாக்கள் மற்றும் வழக்கமான நாட்களில் 24,896 நபர்கள் மீண்டும் இணைந்தனர். மகா கும்பமேளாவின் முடிவில் மொத்தம், 54,357 பேர் தங்களது குடும்பங்களுடன் மீண்டு இணைந்துள்ளதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

மகா கும்பமேளாவின் பல்வேறு இடங்களில் AI அடிப்படையிலான முக அங்கீகார அமைப்புகளுடன் கூடிய சுமார் 10 டிஜிட்டல் கோயா பாய கேந்திரங்கள் நிறுவப்பட்டன.m பாரத் சேவா கேந்திரா, ஹேம்வதி நந்தன் பகுகுணா ஸ்மிருதி சமிதி மற்றும் பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த மீட்பு முயற்சிகளில் முன்னணியில் இருந்தன. பாரத் சேவா கேந்திராவின் பூலே பாட்கே முகாமின் இயக்குநர் உமேஷ் சந்திர திவாரி கூறுகையில், இந்த முகாம் நிகழ்வின் முடிவில் 19,274 பேரை அவர்களது குடும்பங்களுடன் வெற்றிகரமாக இணைத்ததாகவும், காணாமல் போனதாகக் கூறப்படும் 18 குழந்தைகளும் பாதுகாப்பாக அவர்களது குடும்பங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.
கும்பமேளாவில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து அவர்களின் குடும்பத்துடன் சேர்க்க சிறப்பு நடவடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததாகவும், அதன்படி, காணாமல் போனவர்கள் அவர்களின் குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், போனவர்களில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் என்றும் தெரிவித்துள்ளது.
அதே வேளையில், பாரத் சேவா தளத்தின் பூல் பாட்கே முகாமின் இயக்குனர் உமேஷ் சந்திர திவாரியின் கூற்றுப்படி, மகா கும்பமேளாவின் முடிவில், முகாம் காணாமல் போன 19,274 பேரை அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]