பெரு:
பெருவின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 40-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக பியுரா பிராந்தியத்தின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பியுரா பிராந்தியத்தின் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் மேலும் தெரிவிக்கையில், பெருவின் வட மேற்பகுதியில் ரிக்டர் அலகில் 6.1 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரத்தின் படி நேற்று நண்பகல் 12.10 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி சுல்லானா நகரத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர் என்று தெரிவித்துள்ளார். கூடுதலாக, இந்த நிலநடுக்கத்தால், குடியிருப்பு பகுதிகள் மற்றும் வழிபாட்டுத் தளங்கள் போன்றவை சேதமடைந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்த பெரு அதிபர் பெட்ரோ காஸ்டிலோ பாதிக்கப்பட்ட பகுதிக்கு விரைந்துள்ளார்.