டெல்லி: கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு உள்நாட்டு விமானங்களில் இதுவரை 1 கோடி பேர் பயணம் செய்துள்ளனர் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. ரயில், பேருந்து மற்றும் விமான போக்குவரத்து உள்பட அனைத்தும் நிறுத்தப்பட்டன.

பின்னர் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட உள்நாட்டு விமான சேவைகள் துவங்கின. இந் நிலையில் மே 25ம் தேதி முதல் இயக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களில் இதுவரை 1 கோடி பேர் பயணித்துள்ளதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது: மொத்தம் 1 லட்சத்து 8 ஆயிரத்து 210 முறை விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கிற்கு முந்தைய நிலையை போல வழக்கமான எண்ணிக்கையில் பயணிகள், பயணம் செய்ய துவங்கி உள்ளனர். விமான போக்குவரத்து மே 25க்கு பிறகு படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.