சென்னை:

ருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு தமிழக மக்களிடையே வரவேற்பு பெருகி வருகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத  1.5 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக தேசிய தேர்வு முகமை (National Testing Agency (NTA) அறிவித்து உள்ளது.

அடுத்த ஆண்டு (2020)  நடைபெற உள்ள மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு 2020ஆம் ஆண்டு மே3ஆம் தேதி நீட் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

நீட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் டிசம்பர் 2ந்தேதி தொடங்கி டிசம்பர் 30ந்தேதி முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு அட்மிட் கார்டு மார்ச் 27ந்தேதி முதல் வழங்கப்படும் என்றும்,  நீட் தேர்வு முடிவு ஜூன் 4ந்தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  தமிழகத்தில் நீட் தேர்வுக்கு இதுவரை 1.5 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என திமுக உள்பட சில கட்சிகள் அரசியலுக்கு வலியுறுத்தி வரும் நிலையில், பொதுமக்கள் நீட் தேர்வு குறித்த உண்மை நிலையை அறிநிது கொண்டுள்ளனர். இதன் காரணமாகவே ஆண்டுக்கு ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.