கொரோனா … உங்கள் மாஸ்க்ல் உங்கள் முகம்
தினம் தினம் முகத்தில் மாஸ்க் போட்டுக்கொண்டே இருப்பதால் நம் சொந்த முகம் நமக்கே மறந்து விடும் நிலையில் இருக்கிறோம். நாமே நம் முகத்தை மறந்து போன நிலையில் மற்றவர்களுக்கு முகம் நினைவிருக்குமா?
இதனைத் தவிர்த்து மாஸ்க் அணிந்தாலும் கூட நம் முகம் இயல்பாக எப்போதும் போலக் காட்சி தர ஒரு புதுவித ஐடியாவோடு வந்திருக்கின்றனர் கேரளா மாநிலம், கோட்டயம் அருகேயுள்ள எட்டுமநூரை சேர்ந்த “பீனா லேசர்டெக்” என்னும் பிரிண்ட்டிங் நிறுவனத்தினர்.
“நம்மோட சொந்த முகத்தையே இழந்துட்டோமோனு கவலைப்படும் அளவுக்கு ஆகிடிச்சு இப்டி மாஸ்க் போட்டுக்கிட்டே இருக்கிறது. அதான் இப்டி ஒரு புதுவிதமான ஐடியாவை பண்ண நினைச்சோம். வாடிக்கையாளர்களோட போட்டோவை வாங்கி அதனை இதற்கான சாஃப்வேர் மூலமாக மாஸ்க்ல வரா மாதிரி டிசைன் பண்ணி பிரிண்ட் பண்ணி தரோம். இந்த புதுவித மாஸ்க் எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சு போய் நல்ல வரவேற்பை பெற்றிருப்பது ரொம்ப சந்தோசமா இருக்கு” என்கிறார் இதன் உரிமையாளர்.
ஏதாவது புதிது புதிதாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் போது தான் மனிதனுக்கு அதனைச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் வித்தியாசமான யோசனைகள் தோன்றுகின்றன. அதிலும் அதுவே பிசினெஸ் ஐடியாவாக மாறினால் இன்னும் லாபம் தானே.
– லெட்சுமி பிரியா