சென்னை: 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறுவது உறுதி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
2021ம் ஆண்டிற்கான சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. அனைத்து கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரங்களை நேரிடையாகவும், மறைமுகமாகவும் தொடங்கிவிட்டன.
இந் நிலையில், வரும் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணு கூறி இருப்பதாவது: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியாக தங்கள் கட்சி தான் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும்.
அரசியல் சட்டத்திற்கு ஆபத்து வந்துள்ளது. அரசியல் சட்டம் நிலைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சுதந்திரத்திற்காக எப்படி போராடினோமோ அதை போலவே தங்களின் வெற்றியை காக்கவும் போராட வேண்டியுள்ளது என்று கூறினார்.