சென்னை: தமிழ்நாட்டிலும் SIR எனப்படும் தீவிர வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்க்கக் கூடாது தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ரகுபதி, தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தார். தொடர்ந்து பேசியவர், , வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்க்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தவர், தமிழ்நாட்டில் வேலை செய்யும் வடமாநிலத்தவர் எண்ணிக்கை லட்சத்தில் இருந்து கோடியாக மாறியுள்ளது என்றும் கூறியவர், வடமாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு தமிழ்நாட்டின் சூழ்நிலை தெரியாது என்று கூறியவர், அதனால், தமிழ்நாட்டின் நிலவரம் தெரியாதவர்களை தமிழ்நாட்டின் வாக்காளராக சேர்க்கக் கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை என்றார்.
பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட எஸ்ஐஆர் மூலம், சிறுபான்மையினரையும் பட்டியல் இனத்தினரையும் வாக்காளர் பட்டியலில் நீக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது என்றவர், நாடு முழுவதும் உள்ள சிறுபான்மையினர், பட்டியலினத்தவரை பட்டியலில் இருந்து நீக்கவே சிறப்பு திருத்தம் கொண்டு வருகின்றனர் என மத்திய பாஜக அரசை கடுமையாக சாட்டினார்.
மேலும், அதிமுக பாஜக கூட்டணி குறித்தும் விமர்சித்த அமைச்சர், 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக காணாமல் போய்விடும்; திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்