புதுடெல்லி:
புகையிலை பொருள்கள் தொடர்பான காட்சிகளில் கட்டாயம் எச்சரிக்கை வாசகத்தை ஒளிபரப்ப வேண்டுமென்று ஓடிடி தளங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வரும் புகைபிடித்தல், மது அருந்துதல் காட்சிகளில், புகையிலை பொருள்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற எச்சரிக்கை வாசகம் ஒளிபரப்பப்படுகிறது. ஆனால் ஓடிடி தளங்களில் அதுபோன்ற எச்சரிக்கை வாசகங்கள் காட்டப்படுவதில்லை.

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. அதில், புகையிலை பொருள்கள் தொடர்பான காட்சிகளில் எச்சரிக்கை வாசகங்களை ஓடிடி தளங்கள் ஒளிபரப்பவில்லை எனில், மத்திய சுகாதார அமைச்சகமும், தகவல் ஒளிபரப்பு அமைச்சகமும் கடும் நடவடிக்கை எடுக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.