லாஸ் ஏஞ்சல்ஸ்:

லக திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த சிறப்புமிகு விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறுகிறது.

விழா நடைபெறும் இடத்தில் கலந்துகொள்ள வரும்  ஹாலிவுட் நடிகர்கள்,  திரையுலக பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பிரபல ஹாலிவுட் நடிகர்கள் மாட் டாமன், ரயன் கோஸ்லிங், மெரெய்ல ஸ்ட்ரீப், தேவ் படேல், சேத் ரோகன், சல்மா ஹேக், நடிகை சோபியா பவுட்ல்லா, வாரன் பியட்டி, எமி ஆடம்ஸ், லியானார்டோ டிகார்ப்யா உள்பட பலர் கலந்துகொண்டு விருது விவரங்களை அறிவிக்க உள்ளனர்.  ஜிம்மி கிம்மெல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

இந்தியாவின் முன்னணி நடிகைகளான பிரியங்கா சோப்ராவும் தீபிகா படுகோனும் ஆஸ்கார் விழாவில் கலந்துக் கொள்கின்றனர். ஆஸ்கர்  விருது விழாவுக்கு முந்தைய விருந்து நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றனர்.

பே வாட்ச் ஹாலிவுட் தொலைக்காட்சித் தொடரில் பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா  நடித்து வருகிறார். அதேபோல் தீபிகா படுகோணேவும்  ஏற்கனவே வெளியான xxx படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அரெய்வல், ஃபென்சஸ், ஹாக்சா ரிட்ஜ், ஹெல் ஆர் ஹை வாட்டார், ஹிட்டன் பிகர்ஸ், லா லா லேண்ட், லயன், மான்செஸ்டர் பை தி சீ, மூன்லைட் ஆகிய படங்கள் போட்டியில் உள்ளது.

சிறந்த நடிகர்கள் பட்டியலில் கேஸே அப்லெக், ரயன் கோஸ்லிங், விக்கோ மோர்டென்சென், டென்செல் வாஷிங்டன் ஆகியோரும், இஸபெல் ஹப்பெர்ட், ருத் நெக்கா, நடாலி போர்ட்மேன், எம்மா ஸ்டோன், மெரெய்ல் ஸ்டரீப் ஆகியோர் நடிகைகள் பட்டியலிலும் போட்டியில் உள்ளனர்.