சென்னை:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற  மத்திய அரசை வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்களும் மாணவர்களும் தீவிர போராடி வருகின்றனர். இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்றும் தமிழக மக்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், உச்ச நீதிமன்றம் உடனடியாக தீர்ப்பு அளிக்க முடியாது என தெரிவித்துவிட்டது.  மத்தியஅரசும் அவசர சட்டம் இயற்ற முடியாது என்று கூறிவிட்டது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் இன்று பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது நடைபெறும் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட அனைத்து விதமான போட்டிகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதற்காக சிறப்பு சட்டத்தை உருவாக்கும்படி மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த பொதுநல மனுவானது தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது