ஸ்ரீஹரிகோட்டா:

விக்ரம் லேண்டரை ஆர்பிட்டரில் உள்ள கருவிகள் 3 நாளில் கண்டுபிடிக்கும் என்றும் சந்திராயன்2 ஆர்பிட்டரில் 7ஆண்டு செயல்படும் வகையில் எரிபொருள் உள்ளது என்று இஸ்ரோ தலைவரும், சந்திரயான்-2 திட்ட இயக்குனருமான சிவன்பிள்ளை நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

சந்திரயானின் லேண்டர் சாதனம் நிலவில் கால்பதிக்க இருந்தை உலகமே ஆவேலோடு எதிர்பார்த்துக் கொண்டி ருந்தநேரத்தில்,  இறுதி நேரத்தில் லேண்டர் விக்ரம் தொடர்பை இழந்தது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், ஆர்பிட்டர் நல்ல நிலையில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக விரைவில் லேண்டர் எங்கு உள்ளதுஎன்பதை கண்டுபிடிக்க முடியும் என்றும் அடுத்த 3 நாட்களுக்குள் இது தெரியும் என்றும்  இஸ்ரோ சிவன் கூறி உள்ளார்.

நிலவின் தென்துருவ பகுதிகளை ஆராய்ச்சி செய்வதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, கடந்த ஜூலை 22ம் தேதி சந்திராயன் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 48 நாட்கள் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர்ந்தது சந்திராயன் 2. இந்த விண்கல திட்டத்தின் முக்கியமான நிகழ்வு செப்டம்பர் 7 அன்று  நடைபெற்றது.  திட்டமிட்டப்படி அதிகாலையில் நிலவின் தென்துருவத்தில் லேண்டர் சாதனைத்தை தரையிறக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்து. நிலவின் தென்துருவத்தில் மான்சினஸ்-சி, சிம்பிலியஸ்-எஸ் என்ற பள்ளங்களுக்கு நடுவே விக்ரம் லேண்டர், 70 டிகிரி கோணத்தில் மெதுவாக தரையிறக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தபோது, நிலவில் இருந்து சுமார் 2.01 கி.மீ தூரத்தில், சரியாக அதிகாலை 1:58 மணிக்கு விண்கலத்தில் இருந்து வரும் சிக்னல் திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால், இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் பதட்டம் நிலவியது.

இதையடுத்து, சந்திரயானின் வெற்றி தற்காலிகமாக தடை பட்டதை இஸ்ரோ தலைவரும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிவன்,  “சந்திரயான் 2 திட்டம் தோல்வி அல்ல. லேண்டர் உடன் மட்டுமே தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. லேண்டர் சிக்னலை இழந்தாலும், ஆர்பிட்டர் இன்னமும் இஸ்ரோ உடன் தொடர்பில் உள்ளது. இது தொடர்ந்து நிலவின் தென் துருவத்திற்கு மேலாக சுற்றி வந்து ஆராயும்” எ என்று கூறினார்.

விக்ரம் லேண்டரின் நிலை என்ன? என்பது குறித்து சந்திராயன் 2 ஆர்பிட்டர் ஆராயும் என்றும்,  லேண்டர் உடனான தகவல் துண்டிக்கப்பட்டாலும், ஆர்பிட்டரை நாம் தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க முடியும்” எனக் கூறினார்.

லேண்டரை 14 நாட்களுக்குள்  விக்ரமுடன் தொடர்புகொள்ள முயற்சிப்போம். இதற்கு சந்திரயான் 2இன் ஆர்பிட்டாரையும் (வட்டமடிப்பான்) நாங்கள் பயன்படுத்தவுள்ளோம். ஆர்பிட்டாரில் கூடுதலாக எரிவாயு (Fuel) மிச்சமுள்ளதால், ஓராண்டிற்கு பதிலாக ஏழரை ஆண்டு செயல்படவுள்ளது” என்றார்.

மேலும், சந்திரயான் 2 திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு தங்களுக்கு உற்சாகமளித்துள்ளதாகவும் கூறினார்.

சந்திராயன் 2 விண்கலத்தின் செயல்பாடு 95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது 5 சதவீத தோல்வியே என்றும் அதே நேரத்தில் ஆர்பிட்டர் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கின்றது என்றும் இஸ்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இஸ்ரோவுடன் தொடர்பில் இருக்கும் ஆர்பிட்டர் மட்டும் நிலவை தொடர்ந்து ஓராண்டுக்கு படம்பிடித்து அனுப்பும்; தகவல் தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரையும் ஆர்பிட்டரால் படம் பிடிக்க முடியும் என இஸ்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதன் மூலம் விக்ரம் லேண்டரின் நிலை பற்றி உறுதியான தகவல்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.