நெல்லை

நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி தூத்துக்குடியில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

தொடர்ந்து தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.இதையொட்டி அடுத்த 3 நாட்களுக்கு நெல்லை , தென்காசி , கன்னியாகுமரி , தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் எதிரொலியாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.