சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரில் விருப்ப மனு

Must read

சென்னை

சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட உதயநிதி ஸ்டாலின் பெயரில் விருப்ப மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.  டிசம்பர் மாதம் 27 மற்றும் 28 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.   தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாநில தேர்தல் ஆணையருடன் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வசதியாக அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வை டிசம்பர் 23 ஆம் தேதிக்கு ள் முடிக்க வேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறைக்கு ஆணையம் அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.  இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் விருப்ப மனு பெறத் தொடங்கி உள்ளது.

இன்று தியாகராய நகர் மேற்கு வட்ட திமுக அலுவலகத்தில் மேயர் பதவிக்குப் போட்டியிட விருப்ப மனு பெறப்பட்டது.  அப்போது இளைஞர் அணி அமைப்பாளர் சிற்றரசு உள்ளிடோர் சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரில் விருப்ப மனு அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

More articles

Latest article