சென்னை: சமீபத்தில் திமுகவில் இணைந்த  அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், திமுக சார்பில் போட்டியிட திமுக தலைமைகயமான அண்ணா அறிவிலயத்தில் விருப்ப மனு அளித்தார்.

திமுகவில் விருப்பமனு வழங்க கடைசி நாளான இன்று  சமீபத்தில் திமுகவில் இணைந்த ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் தரப்பில் தி.மு.க. சார்பில் போட்டியிட  விருப்ப மனு அளிக்கப்பட்டது. மேலும்,  தி.மு.க. நிர்வாகிகள் பலரும் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை வழங்கி வருகிறார்கள்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இந்த மாதம்  இரண்டாவது வாரத்தில் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.   இதற்கிடையில், தமிழ்நாட்டில்  அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.  ஆளும் கட்சியான தி.மு.க. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் வகையில், கூட்டணி பலத்தை அதிகரித்துள்ளதுடன், மக்களை கவரும் வகையில், மகளிர் உரிமை தொகை அதிகரிப்பு   உள்பட பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளி யிட்டும், கட்சி உறுப்பினர்கள் மூலம் தேர்தல் பணிகளையும் தீவிரப்படுத்தி வருகிறது.

அதேவேளையில்,  ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கி உள்ள அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பிலும் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கிடையில், நாம் தமிழர் கட்சி  எப்போதும்போல தனித்து களமிறங்குவதுடன், தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை களமிறக்கி  திராவிட கட்சிகளுக்கு சவால் விடுத்துள்ளது. புதிதாக  கட்சி தொடங்கி உள்ள விஜயின் தவெகவுயும் தனித்து களமிறங்குகிறது. இதனால்  4 முனை போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனுக்களை அளிக்க கோரி வருகின்றன. அதன்படி தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

தற்போதைய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்து வருகிறார்கள். மேலும், தி.மு.க. நிர்வாகிகள் பலரும் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை வழங்கி வருகிறார்கள். விருப்ப மனு அளிப்பதற்கு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் அண்ணா அறிவாலயத்தில் இன்று வழக்கதை விட கூட்டம் அலைமோதுகிறது.

இதனிடையே தி.மு.க. சார்பில் போடி நாயக்கனூர் தொகுதியில் போட்டியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் விருப்பமனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் போடி, ஆண்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிட் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.ரவீந்திரநாத் விருப்பமனு அளித்தார்.

[youtube-feed feed=1]