சனீ்ஸ்வரன் கோயிலில் ஓ.பி.எஸ்.

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி பொதுச் செயலாளருமான ஓ.பன்னீர்செல்வம், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற சனீஸ்வரர் கோயிலுக்குச் சென்று  வழிபட்டார்.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக டில்லி சென்றிருந்தார் ஓ.பன்னீர்செல்வம்.  பிறகு  அங்கிருந்து மகாராஷ்டிர மாநிலம் சென்றார். அங்கு சனி ஷிங்னாபூர் என்ற ஊரில் உள்ள புகழ்  பெற்ற சனீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். அங்கு சிறப்பு வழிபாடுகள் செய்தார்.

அப்போது அவரது அணியைச் சேர்ந்த  மைத்ரேயன், கே.பி.முனுசாமி, செம்மலை, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டார்கள்.


English Summary
ops-visits-maharastra- Saneeswaran Temple