தூத்துக்குடி

மிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நாளை தூத்துக்குடிக்கு செல்ல உள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.   இந்த போராட்டத்தின் 100 ஆவது நாளன்று வன்முறை வெடித்து காவல்துறையினர் துப்பாக்கிசூடு நிகழ்த்தியதில் 13 பேர் மரணம் அடைந்தனர்.  பதற்ற நிலை நீடித்ததால் 144 தடை உத்தரவு தொடர்ந்து வந்தது.

இன்று 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.   தூத்துக்குடியில் பேருந்துகள் ஓடத் துவங்கி உள்ளன.   நாளை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் காண தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தூத்துக்குடி செல்கிறார்.   இதற்காக இன்றிரவு மதுரை செல்லும் அவர் கோவில்பட்டியில் தங்க உள்ளார்.