சென்னை:
கொரோனா தடுப்பு பணி களப் பணியாளர்கள் மாற்றப்பட மாட்டார்கள் என்று உறுதியளித்த முதல்வருக்கு ஓபிஎஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது;
கொரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப் பணியாளர்களை நீக்கிவிட்டு, புதிதாக வேறு நபர்களை பணியமர்த்த வேண்டுமென சென்னை மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டுவதாக வந்த செய்தியை நான் கண்டித்ததோடு, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர், அவர்களிடம் அறிக்கை வாயிலாக கேட்டிருந்தேன்.
இதனையறிந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ‘தற்போது பணிபுரியும் களப்பணியாளர்கள் யாரும் நீக்கப்பட மாட்டார்கள்’ என்ற உத்திரவாதத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் மூலமாக எனக்கு தெரியப்படுத்தியுள்ளார்கள்.
இதற்காக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.