சென்னை:

நாளை சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் நடைபெற இருக்கும் வாக்கெடுப்பு, ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று சபாநாயகரிடம் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ளதையடுத்து பெரும்பான்மை நிரூபிக்க  நாளை சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது.

அதன் காரணமாக ஓபிஎஸ் அணியினர் இன்று காலை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.  இந்த ஆலோசனை கூட்டத்தில்  அதிமுகவின் மூத்த நிர்வாகிகளான பொன்னையன், பி.எச்.பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, செம்மலை  உள்பட ஆதரவு எம்எல்ஏக்கள், எம்.பிக்கள்  அனைவரும் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் மாஃபா பாண்டியன், செம்மலை மற்றும் பொன்னையன் ஆகியோர் சபாநாயகர் தனபாலை சந்தித்து பேசினார். அப்போது, ரகசிய வாக்கெடுப்பு நடத்த சபாநாயகரிடம் ஓபிஎஸ் ஆதரவு அணியினர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

சபாநாயகர் தனபால் ஒருவேளை  நாளை ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டால், தனக்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்குமா என எடப்பாடி அணியினர் பீதியடைந்து உள்ளனர்.