நாளை காலை 10 மணிக்கு ஓபிஎஸ் அணியினர் கூட்டம்! மா.பா அறிவிப்பு

Must read

சென்னை,

ஓ.பி.எஸ் அணி (அதிமுக புரட்சித்தலைவி அம்மா) எம்.பிக்கள் எம்.எல் ஏக்கள் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என மா.பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.

அதிமுக அம்மா அணியில்,  தற்போது சசிகலா, தினகரன் குடும்பத்தினரை விலக்கி வைப்பது என்று மூத்த அமைச்சர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக இரு அணிகளும் இணைய வாய்ப்புகள் உருவாகி உள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், இது தங்களது தர்மயுத்தத்திற்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்.

இந்நிலையில் இரு கட்சிகளின் இணைப்பு குறித்து ஆலோசிக்க முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் , மற்றும் எம்.பி-க்கள் ஆலோசனை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

அந்த கூட்டத்திற்கு பிறகு பன்னீர் செல்வம் அணி சார்பாக பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும் எனவும், அமைச்சரவை பற்றிய விவாதங்களும் குறித்தும் பேசப்படும் என ஓபிஎஸ் அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More articles

Latest article