மதுரை: திமுகவில் ஓபிஎஸ் இணைந்ததைத்தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வுடன் இணையும் விழா நாளை நடைபெறுகிறது. இந்த விழா மதுரையில் நடைபெற உள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அக்கட்சியில் இருந்த விலகி தி.மு.க.வில் இணைந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள தன்னுடைய ஆதரவாளர்களை அக்கட்சியில் இணைக்கும் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரை அருகே வரும் 7ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
முன்னதாக, ஜெயலிதாவின் விசுவாசத்துக்கு அடையாளமாக கூறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க.வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். அவருடன் அவரது மகன் ரவீந்திரநாத், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், மதுரை மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்னண் உள்ளிட்டோரும் சேர்ந்தனர்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களை தி.மு.க.வில் இணைக்கும் பணிகளில் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த இணைப்பு விழா, தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் மதுரைக்கு அருகே வரும் 7ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]