சென்னை,

ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய திமுக கொறடா தொடர்ந்த வழக்கில்,திமுக மனுவை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சபாநாயகர் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று  சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

திமுக ஓபிஎஸ், இபிஎஸ் அணியாக பிரிந்திருந்தபோது, எடப்பாடி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, ஓபிஎஸ் அணியினர் எதிர்த்து வாக்களித்தனர்.

இதில், அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணியினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் திமுக கொறடா கடந்த ஆண்டு அக்டோபர் 12ந்தேதி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், தலைமை நீதிபதி அமர்வு ஒத்திவைத்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. தமிழக சட்டமன்ற தலைவர் அதிகாரத்தில் நீதி மன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்வதாக  சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதி தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.

இன்றைய தீர்ப்பு திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்பை காணும்போது, டிடிவி தினகரன் வழக்கில் இதே தீர்ப்புதான் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.