சென்னை

த்திய அரசை நீட் தேர்வு ரத்து செய்யக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள்மூலம் மூலம் வற்புறுத்துமாறு ஓ பன்னீர்செல்வம் முதல்வருக்கு ஆலோசனை அளித்துள்ளார்.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் மட்டுமே நடைபெற்று வருகிறது.   அதே வேளையில் தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது.  சென்ற  ஞாயிற்றுக்கிழமை  அன்று நீட் தேர்வு நடந்தது.

அதற்கு முதல் நாள் மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்னும் மாணவர் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்டார்.   நீட் தேர்வு முடிந்த  பிறகு அரியலூரைச் சேர்ந்த மாணவி கனிமொழி என்பவர் தேர்வு சரியாக எழுதவில்லை என்பதால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.  பலமுறை நீட் தேர்வு ரத்து குறித்து தமிழக அரசு கேட்டுக் கொண்டும் மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், “தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி அழுத்தம் தர வேண்டும்.   விரைவில் குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.

தற்போது திமுக கூட்டணியில் 39 மக்களவை உறுப்பினர் உள்ளனர்.  எனவே இதன் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய முதல்வர் முக ஸ்டாலின் வற்புறுத்தலாம்.” என ஆலோசனை அளித்துள்ளார்.