சென்னை,

மிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோட்டை யில் இன்று சந்தித்து பேசினார்.

ஜெயலலிதா மறைந்ததை அடுத்து ஓபிஎஸ் தமிழக முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் முதல்வரை மத்தியஅமைச்சர் பொன்னார் கோட்டைக்கு வந்து சந்தித்தது, தலைமை செயலக வட்டாரத்தில் பரபரப்பு அடைந்துள்ளது.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை, மத்திய இணை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று திடீரென சந்தித்து பேசினார். தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.ஓ.பி.எஸ் முதல்வராக பதவியேற்ற பின், பொன்.ராதாகிருஷ்ணனுடன் நடக்கும் முதல் சந்திப்பு  என்பது குறிப்பிடத் தக்கது.

தற்போது தமிழக அரசியலில், குறிப்பாக அதிமுகவில் சசிகலா பொதுச்செயலாளர் பதவி ஏற்றதை தொடர்ந்து அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் அதிமுகவிலேயே சசிகலாவுக்கு ஆதரவாக ஒரு குரூப்பும், அவருக்கு எதிராக ஒரு குரூப்பும்  போஸ்டர் யுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையில் தமிழக அமைச்சர்கள் சிலர் சசிகலா தமிழக முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

தமிழக எம்.பி.யும், பாராளுமன்ற துணைசபாநயகருமான தம்பித்துரையும், சசிகலா தமிழக முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

இதைத்தொடர்ந்து ஓபிஎஸ்-சுக்கும், தம்பித்துரைக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது.

சசிகலா தமிழக முதல்வராக, கோட்டையில் அமர்ந்து வரலாற்றில் தனது பெயரை பதிவு செய்ய வேண்டும் என்று துடித்து வருகிறார்.

அவருக்கு ஆதரவாக ஒரு பிரிவினர், ஓபிஎஸ்-சை தமிழக முதல்வர் பதவியில் இருந்து விலக நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தலைமைசெயலகத்தில் முதல்வர் ஓபிஎஸ்-ஐ, மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் சந்தித்து பேசியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக கோட்டை வட்டாரம் பரபரப்படைந்துள்ளது.

ஆனால், குளச்சல் துறைமுகம், தமிழக சாலைப் பணிகள் குறித்து முதல்வரிடம் ஆலோசித்ததாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.