சென்னை: அதிகார போதையால் ஏற்பட்ட மோதல் காரணமாக, அதிமுகவில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு, பாஜகவாலும் மூக்கறுக்கப்பட்டு, அரசியல் அனாதை யாக இருந்து வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், 2026 தேர்தலை மனதில் கொண்டு, திமுக கூட்டணியில் ஐக்கியமாக முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக நேற்று (ஜூலை 30ந்தேதி)  ஒரே நாளில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்.

இவர்களது பேச்சு, முதல்வரின் உடல்நலம் குறித்து என்று கூறப்பட்டாலும், ஓபிஎஸ் திமுக கூட்டணியில் ஐக்கியமாகலாம் அல்லது திமுகவிலேயே இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை உறுதி செய்யும் வகையில்தான் ஓபிஎஸ்-ன் செய்தியாளர்களும் சந்திப்பு உறுதி செய்துள்ளது.

தி.மு.க உடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா?  என்ற கேள்விக்கு, “அரசியலில் நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை என்ற நிலை தான் கடந்த கால வரலாறு; எதிர்காலத்தில் தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில் எதுவும் நடக்கலாம்” என்று அவர் ஓபிஎஸ் கூறியிருப்பது, அவர் அதிமுக, பாஜக கூட்டணிக்கு எதிரான அரசியல் களத்தில் இறங்குவது உறுதியாகி உள்ளது.

அதிமுகவில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்தவர் ஓ.பன்னீர்செல்வம் எனப்படும் ஓபிஎஸ். அ.தி.மு.க ஆட்சி காலத்தில் 3 முறை ( 2001 –  2002, 2014 – 2015, 2016) தமிழக முதலமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். 2016-ல் முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவர் முதல்வர் பொறுப்பு வகித்த போது, கட்சிக்குள் நிலவிய நெருக்கடி காரணமாக, சசிகலா முதல்வர் பதவியை பிடிக்க முயற்சித்தபோது, வலுக்கட்டாயமாக பதவி, சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தினார்.  அவரது தர்மயுத்தம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், அப்போது அதிமுகவை தனது கைக்குள்  வைத்திருந்த சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதும், எடப்பாடியை முதல்வராக நியமித்து அவர்மூலம் அதிமுக ஆட்சி நடைபெற்றது. இதனால் அதிமுக சில துண்டுகளாக உடைந்தது. இருந்தாலும், மத்திய பாஜக ஆதரவுடன் ஒபிஎஸ் இபிஎஸ் இணைந்து ஆட்சி நடத்தினர்.   அந்த ஆட்சியும் சலசலப்புடன் தனது முழு ஆயுள் காலத்தையும் ஓட்டியது.

இதற்கிடையில், கட்சியில் எடப்பாடி பழனிசாமி ஒருணைப்பாளராகவும், ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருணைப்பாளராகவும் பதவி வகித்தனர். ஆனால், சில மாதங்களில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்கிற குரல் ஒலித்தது. அப்போது, அ.தி.மு.க இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் என அணிகளாக உடைந்தது. கட்சியை கைப்பற்றும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி பழனிசாமி வென்றார். அத்துடன் செயற்குழு மற்றும் பொதுக்குழுக்களின் ஆதரவுடன் பொதுச்செயலாளராக வாகை சூடினார்.

ஓபிஎஸ்மீதான அதிருப்தியில்,  அவரை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி, அதிமுகவை முழுமையாக தது கட்டிப்பாட்டில் கொண்டு வந்து, அதிமுக பொதுச்செயலாளராக தேர்வாகி, கட்சியை நடத்தி வருகிறார். இதற்கிடையில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் மூலம் அதிமுக தலைமை அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, அடிதடியில் ஈடுபட்டு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு  சிலகாலம் அரசு சீல் வைக்கும் அளவுக்கு சென்று அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி, தனக்கு தானே தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டார்.

ஆனால் தன்னை வளர்த்து ஆளாக்கிய கட்சியின் தலைமை அலுவலகத்தையே கைப்பற்ற, சூறையாட முற்பட்டவர்க ளெல்லாம் படிப்படியாக செல்வாக்கு இழந்து ஒரு கட்டத்தில் அரசியலில் செல்லா காசாகவே ஆகி விடுகிறார்கள். அதுபோன்ற நிலையில், அதிமுக தொண்டர்களால் மறக்கப்பட்ட தலைவராக ஓபிஎஸ் அறியப்பட்டார்.

இருந்தாலும்,  அவரால் 2021 மற்றும் 2024 தேர்தல்களில் முழுமையான வெற்றிக்கனியை பறிக்க முடியவில்லை. இதனால், ஆட்சி திமுக வைக்கு சென்றுவிட்டது. அதிமுக தோல்விக்கு பாஜக காரணம் என்று சில அதிமுக தலைவர்கள் குற்றம் சாட்டிய நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மீண்டும் பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்து செயலாற்றி வருகிறது. மேலும் நீதிமன்றமும்,  தேர்தல் ஆணையமும், எடப்பாடியை அதிமுக பொதுச்செயலளராக அங்கீகரித்த நிலையில், அதிமுக என்ற பெயரை  ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதித்தது.

இதனால் விரக்தி அடைந்த ஓபிஎஸ், தமிழக அரசியலில் அனாதை என்ற அவச்சொல்லுக்கு ஆளானார். இதைத்தொடர்த்நது,     அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கினார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க சிறுபான்மை கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க-வின் ஆதரவாளராக ராமநாதபுரத்தில் போட்டியிட்டு பெரும் தோல்வி கண்டார். சொந்த ஊரிலேயே அவர் தோற்கடிக்கப்பட்டது, அவரது அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது.

தற்போது 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் சூழலில், பா.ஜ.க-வுடன் மீண்டும் கூட்டணியை உறுதி செய்து, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இதனிடையே, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடியை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டதாகவும், ஆனால், அவருக்கு மட்டும் நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.  இதனால் கடும் கோபமடைந்த ஓபிஎஸ், முதன்முறையாக, பாஜகவுக்கு எதிரான அனது அஸ்திரத்தை வீசினார்.  கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்தார்.

இதனால், ஓபிஎஸ், திமுக அல்லது விஜய் உடன் கூட்டணி வைப்பார் அல்லது அந்த கட்சிகளில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவி. இத்தகைய சூழலில், நேற்று அதிகாலை (ஜுலை 31) முதல்வர் ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்ட நேரத்தில், ஓபிஎஸ்- அங்கு சென்று முதல்வரை சந்தித்து பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் விவாதித்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரான பண்ருட்டி ராமச்சந்திர, ஒபிஎஸ் அணி பாஜகவுடனான கூட்டண  முறித்துக்கொள்வதாக அறிவித்தார். மேலும்,  ‘தி.மு.க.வை வீழ்த்துவது எங்கள் இலக்கல்ல’ என்றும் கூறினர். இதனால், ஒபிஎஸ் அணி திமுகவில் ஐக்கியமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நேற்று மாலை,  மீண்டும் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்திற்கு செறு சந்தித்தார். ஒரே நாளில் 2-வது முறையாக  முதலமைச்சரை ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து மார் 30 நிமிடங்களுக்கும் மேலாக ஆலோச நடத்தியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்மைச்சருடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், “முதலமைச்சரின் உடல்நலம் பற்றி விசாரிக்க, மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்தேன். அரசியல் ரீதியாக எந்தப் பேச்சும் நடக்கவில்லை” என்று தெரிவித்தார்.

தி.மு.க உடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, “அரசியலில் நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை என்ற நிலை தான் கடந்த கால வரலாறு. எதிர்காலத்தில் தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில் எதுவும் நடக்கலாம். தமிழகத்திற்கு கல்வி நிதி தராததால் மத்திய பா.ஜ.க. அரசு மீது எனக்கு வருத்தம் உள்ளது. அரசியலில் எனக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது. தேர்தலில் ஒன்று சேர்ந்துள்ள பா.ஜ.க. – அ.தி.மு.க.வுக்கு வாழ்த்துக்கள்.” என்று கூறினார்.

விஜய்யுடன் கூட்டணி வைக்கப்படுமா? என்ற கேள்விக்கு, “இதுவரை அவர்களும் பேசவில்லை. நாங்களும் பேசவில்லை” என்று ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.