டெல்லி:
வர்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. புயலால் ஏற்பட்ட சேத மதிப்பை கணக்கிட்டு தமிழக அரசின் கீழ் செயல்படும் துறைகள் வாரியாக அறிக்கை பெறப்பட்டது.
இந்த அறிக்கையை பிரதமர் மோடியிடம் கொடுத்து நிவாரணம் வழங்க வலியுறுத்துவதற்காக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிகாரிகள் இன்று டெல்லி சென்றனர்.
காலை 9.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப் பட்டனர். டெல்லி சென்றடைந்ததும். டெல்லியில் உள்ள தமிழக அதிகார பூர்வ இல்லத்தில் முதல் அமைச்சர் பன்னீர் செல்வத்துக்கு, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அங்கு தம்பிதுரை, உயர் அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
 
 

 
இதன் பின்னர் மாலை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்த்தித்து பேசினார்.
புயலால் ஏற்பட்ட சேதமதிப்பு விவரம் அடங்கிய 184 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவையும் அவரிடம் கொடுத்தார். உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தினார். 22 ஆயிரத்து 457 கோடி ரூபாய் புயல் நிவாரண நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். பின்னர் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். பாராளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவுக்கு முழு உருவ வெண்கல சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதமும் கொடுத்தார்.
கோரிக்கைகள் மீது பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மோடி உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து புயல் சேதத்தை மதிப்பீடு செய்த மத்திய ஆய்வு குழு தமிழகம் வரவுள்ளது.
 
CM OPS meets  PM , seeks relief for TN districts affected by Cyclone Vardah.