சென்னை:
சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் மூன்று சதம் அடித்து அசத்தினார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 16ம் தேதி முதல்  நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்திய வீரர் கருண் நாயர் 3 சதங்கள் அடித்தார்.
அவரை பற்றிய தகவல்கள்:-
#கருண் நாயர் தன்னுடைய 3-வது டெஸ்ட் போட்டியை விளையாடி 381 பந்துகளில் 303 ரன்கள் (நாட் அவுட்) எடுத்து உள்ளார். இன்னிங்சில் 34 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்கர்களை அடித்தார்.
# முதல் சதமாக முச்சதம் அடித்த மேற்கிந்திய அணியை சேர்ந்த கேரி சோபர்ஸ், ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாபி சிம்சன்ஆகியோருக்கு பிறகு கருண் இந்த சாதனையை படைத்துள்ளார்.

#இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அதிகமான ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையை தனதாக்கி உள்ளார் கருண் நாயர். பேட்டிங் தரவரிசையில் 5-வது ஆளாக இறங்கி அதிகமான ரன்கள் அடித்தவர் என்ற பெருமையையும் தனதாக்கி உள்ளார். முன்னதாக இந்தியாவின் கேப்டன் 2013-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 224 ரன்கள் அடித்து இருந்தார்.
# மூன்று சதம் என்ற இந்தியாவின் 8 வருட கனவை இன்று கருண் நாயர் முடிவுக்கு கொண்டு வந்து உள்ளார். முன்னதாக கடந்த 2008-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியாவின் முன்னாள் நட்சத்திரம் விரேந்திர சேவாக் முச்சதம் அடித்து இருந்தார். இப்போது இவ்வரிசையில் கருண் நாயர் இணைந்து உள்ளார். விரேந்திர சேவாக கடந்த 2004-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியிலும் முச்சதம் அடித்து அசத்தியிருந்தார்.
# கருண் நாயரின் 303 (நாட் அவுட்) ரன்கள் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 759/7 டிக்ளர் செய்ய உதவிஉள்ளது. இது இந்தியா இன்னிங்சில் எடுத்த அதிகமான ரன்கள் ஆகும். முன்னதாக இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா 726/9 ரன்கள் எடுத்து இருந்ததே அதிகப்பட்ச ரன்னாக இருந்தது.
# கருண் நாயர் தன்னுடைய முதல் டெஸ்ட் ஆட்டத்தை மொகாலியில் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தொடங்கினார்.
#வலது கை ஆட்டக்காரரான கருண் நாயர் தன்னுடைய இந்திய அணிக்கான முதல் ஒருநாள் போட்டி ஆட்டத்தை இவ்வாண்டு ஜூன் 11-ம் தேதி ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் தொடங்கினார்.

# உள்நாட்டு போட்டிகளில் கர்நாடகா அணிக்காக விளையாடிய கருண் நாயர் 39 முதல்-தர போட்டிகளில் 2862 ரன்கள் எடுத்து உள்ளார். 2013-14 மற்றும் 2014-15 சீசன்களில் அணி மீண்டும் ரஞ்சி கோப்பையை வெல்ல முக்கிய பாத்திரமாக விழங்கினார் கருண் நாயர்.
# கருண் நாயர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 1991-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ம் தேதி பிறந்தார். இப்போது அவருக்கு வயது 25.
# 2013-ம் ஆண்டைய ஐபிஎல் போட்டிகளில் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட்டை தொடங்கினார்.
# பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார், இப்போது டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
 
Triple Centurion Karun Nair’s Profile and his achievements in his short career of cricketing career.